அறந்தாங்கியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலை
By DIN | Published On : 12th April 2019 09:54 AM | Last Updated : 12th April 2019 09:54 AM | அ+அ அ- |

அறந்தாங்கியில் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை சீரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் வியாழக்கிழமை திராவிடர் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது .
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலை அண்மையில் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது. வருவாய்த் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின்படி சுவாமிமலை ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டு பெரியார் சிலை சீரமைக்கப்பட்டு வியாழக்கிழமை திராவிடர் கழகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., உதயம் சண்முகம், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் ராவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கவிவர்மன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.