பிடாரி அம்மன் பூச்சொரிதல் விழா
By DIN | Published On : 17th April 2019 05:22 AM | Last Updated : 17th April 2019 05:22 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீ பிடாரிஅம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மின் அலங்காரம், நாகசுரக் கச்சேரியுடன் திருவரங்குளம் அனைத்து வியாபாரிகள் சங்கம், கிட்டக்காடு, புதூர், பெரியநாயகிபுரம், இடைத்தெரு, தெற்கு தெரு, கோவில்பட்டி, பாரதியார்நகர், இடையன்வயல், கே.வி.எஸ் நகர் ஆகிய இடங்களிலும் இருந்தும் பக்தர்கள் பூக்களை ஏந்தி வந்தனர்.
வரும் ஏப். 23 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி வீதிவுலா, சந்தனக் காப்பு அலங்காரம், அன்னதானம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.முக்கிய நிகழ்வான 8 ஆம் திருவிழா ஏப். 30ஆம் தேதி பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர். தொடர்ந்து பூசாரி, கிடா வெட்டுதல் நிகழ்ச்சியை தொடங்கிவைப்பார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...