மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உறுதி ஏற்பு
By DIN | Published On : 17th April 2019 05:23 AM | Last Updated : 17th April 2019 05:23 AM | அ+அ அ- |

அறந்தாங்கியில் மாற்றுத்திறனாளிகள் பிரைலி முறையில் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் வசந்தகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வாக்குப்பதிவு மையங்களில் பிரைலி முறையில் வாக்களிப்பது தொடர்பாக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும், அனைவரும் 100 சதவீதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், முடநீக்கியல் வல்லுநர் ஜெகன்முருகன், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் பிரியா, செயல்திறன் உதவியாளர் சிவக்குமார், சைகைமொழி பெயர்ப்பாளர் ராஜூ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி திருஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...