அறந்தாங்கி பச்சைக்காளி அம்மன் வீதி உலா
By DIN | Published On : 26th April 2019 05:17 AM | Last Updated : 26th April 2019 05:17 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருள்மிகு பிள்ளைதாச்சியம்மன், பச்சைகாளியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்று செவ்வாய்கிழமை காப்புகட்டி திருவிழா துவங்கியது. முதல் நாள் பாரதியார்தெரு, கள்ளிசந்து, கள்ளிசந்து 2-ம் வீதி, எக்ஸல் தியேட்டர் முதல் தண்டாயுதபாணி மில் வரை திருவிழா நடைபெற்றது. சுவாமி வீதிஉலா, மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. புதன்கிழமை 2 ஆம் நாள் மண்டகப்படிதாரர்களான புதுத்தெரு, பெரியார் தெரு, களப்பக்காடு, என்.ஜி.ஓ காலனி, மீனாம்பாள் நகர் உள்ளிட்ட பகுதி மக்களின் சார்பில் நடைபெற்ற திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வீதி உலா நடைபெற்றது.
வியாழக்கிழமை 3 ஆம் நாள் மணடகப்படிதாரர்களான எழில்நகர், கெங்காதரபுரம், மாநாட்டு திடல், தாரணி நகர் பட்டுக்கோட்டை சாலை பகுதிவாழ் மக்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது. இரவு வீதிஉலா நடைபெற்றது. இப்பகுதி மக்கள் ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தார்கள்.