கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்  : தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2019-20 ஆம் கல்வி ஆண்டின் 25 சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் கடந்த 22 ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.  இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் மே 18ஆம் தேதி ஆகும். சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகள், தொடக்க நிலை வகுப்புகள் எல்கேஜி அல்லது 1ஆம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க ஏதுவாக மொத்த இடங்களில் 25 சதவிகிதம் ஆன்லைன் மூலம் நிரப்புவதற்கு  பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டும்.  எல்கேஜி சேர்க்கைக்கு ஜூலை 31ஆம் தேதி மாணவரின் வயது 3 முடிவடைந்திருக்க வேண்டும். 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு ஜூலை 31ஆம் தேதி மாணவரின் வயது 5 முடிவடைந்திருக்க வேண்டும்.  ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் பெறும் அனைத்துப் பிரிவினரும் நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருமானச் சான்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் குழந்தைகளை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் இருப்பிடச் சான்று, குழந்தையின் புகைப்படச் சான்று, ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை, பிறப்புச் சான்று, சாதி சான்றினை அளித்து எல்கேஜி வகுப்புகளில் சேர்க்கலாம். அல்லது பள்ளிக் கல்வித் துறையின் ட்ற்ற்ல்:/ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ர்ர்ப்ள்.ஞ்ர்ஸ்.ண்ய்/ற்ஹம்ண்ப்ய்ஹக்ன் என்ற இணைய தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித கல்வி கட்டணமும் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் பெறமாட்டார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com