தற்காப்புக் கலை பயிற்சி முகாம் நிறைவு
By DIN | Published On : 26th April 2019 05:16 AM | Last Updated : 26th April 2019 05:16 AM | அ+அ அ- |

திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதுகை புத்தாஸ் வீரக்கலைகள் கழகம் சார்பில் தற்காப்புக் கலைப் பயிற்சி முகாம் கடந்த ஏப். 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்தராமன் தலைமை வகித்தார். நேரு யுவ கேந்திராவின் கணக்கா நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். எஸ்விஎஸ் ஜெயகுமார் கலந்து கொண்டு நற்சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
விழாவில், சிலம்பாட்டக் கழகச் செயலர் சத்தியமூர்த்தி, யோகா ஆசிரியர்கள் செல்வராஜ், யோகா பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பள்ளியின் துணை முதல்வர் எஸ். குமரவேல் வரவேற்றார். வீரக்கலைகள் கழகதத்தின் நிறுவனர் சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.