பொன்னமராவதியில் பெண் காவலர் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 26th April 2019 05:15 AM | Last Updated : 26th April 2019 05:15 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர் புதுகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு சென்னிமலை முருங்கத்தொழு பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகள் நந்தினி(21). இவர் தன்னுடன் பணியாற்றும் காவலரை காதலித்து வந்துள்ளார். காதலருக்கு வேறு பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டதை அறிந்த நந்தினி மனஉளைச்சலில் இருந்துள்ளார். இவர், பொன்னமராவதிக்கு பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளார். வியாழக்கிழமை பணியில் இருந்தபோது குளிர்பானத்துடன் பூச்சிமருந்தைக் கலந்து அருந்தியுள்ளார். சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்துள்ளார். உடனிருந்த பெண் காவலர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் நந்தினியை கொண்டு சேர்த்துள்ளார். அங்கு நந்தினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.