சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை: புதுகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
By DIN | Published On : 04th August 2019 03:35 AM | Last Updated : 04th August 2019 03:35 AM | அ+அ அ- |

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
ஆலங்குடி கலிபுல்லா நகரைச் சேர்ந்தவர் அசரப்அலி ( 68). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியைக் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார், ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் அசரப் அலியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம். ராஜலெட்சுமி சனிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசரப் அலிக்கு ஆயுள் சிறை சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்த நீதிபதி, அபராதத் தொகையைக் கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...