முற்போக்குப் பேரவைக் கருத்தரங்கு
By DIN | Published On : 04th August 2019 03:35 AM | Last Updated : 04th August 2019 03:35 AM | அ+அ அ- |

தேசியக் கல்விக் கொள்கை வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய முற்போக்கு பேரவை சார்பில் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட செயலர் என்.ஆர். ஜீவானந்தம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் மு. மாதவன், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். சாந்தி, மாநில பொதுச் செயலர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் ஆகியோர் பேசினர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலர் கே. ராஜேந்திரன் நன்றி கூறினார்.