மக்கள் நீதி மய்யம் ஆலோசனை
By DIN | Published On : 06th February 2019 09:34 AM | Last Updated : 06th February 2019 09:34 AM | அ+அ அ- |

அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யத்தின் அறந்தாங்கி தொகுதி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என்.வைரவன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார். மத்திய மண்டல பொறுப்பாளர்கள் சி.எம்.ஆர். கமல் சுதாகர், எஸ். மூர்த்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதி பொறுப்பாளர்கள், தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொகுதி பொறுப்பாளர் பழ. அழகப்பன் வரவேற்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...