அறந்தாங்கியில் நகர்ப்புற வளர்ச்சிக்கான பெருவிழா
By DIN | Published On : 12th February 2019 08:51 AM | Last Updated : 12th February 2019 08:51 AM | அ+அ அ- |

அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டமாகிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர்ப்புற வளர்ச்சிக்கான பெருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி நகர்ப்புற வளர்ச்சிக்கான பெருவிழா வரும் பிப். 15 வரை நடைபெறுகிறது. அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் சிறப்புரையாற்றிய,
மகளிர் திட்டக்குழு உதவி திட்ட அலுவலர் சீனிவாசன் பேசியது:
நகர்ப்புற வளர்ச்சியே இத்திட்டத்தின் நோக்கம். ஆகவே இத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் வறுமைகோட்டிற்கு கீழ் நகரில் உள்ள உழைக்கும் மக்களைக் கண்டறிந்து அவர்கள் வாழ்வில் முன்னேற வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலே அவர்களுடன் சேர்ந்து நகரமும் வளரும். ஆகவே அவர்களின் வாழ்வாதாரம் பெருக அனைத்து வழிமுறைகளையும் செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலர் ஆசிர்வாதம், நகராட்சி மேலாளர் ரெ.முத்துக்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.