திறந்த மனதோடும் இருக்கும் குழந்தைகள்தான் அறிவாளிகள்: கவிஞர் நந்தலாலா

திறந்த மனதோடு இருக்கும் குழந்தைகள்தான் அறிவாளிகள் என்றார் கவிஞர் நந்தலாலா.

திறந்த மனதோடு இருக்கும் குழந்தைகள்தான் அறிவாளிகள் என்றார் கவிஞர் நந்தலாலா.
புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஏடிஆர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பள்ளியின் ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
குழந்தைகள் பெரியோர்களை விடவும் உண்மையில் அறிவானவர்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க சிந்தனைத் தன்மை கெட்டித்தட்டிப் போகும். ஆனால், குழந்தைகள் திறந்த மனதோடு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் அறிவானவர்கள்.
பள்ளிப் பருவத்தில் 8, 9, 10 ஆகிய மூன்று வகுப்புக் காலங்களில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்தி தங்கள் குழந்தைகளுடன் நிறைய பேசிக் கொண்டிருக்கும் குடும்பங்களில், அந்தக் குழந்தைகளால் எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை.
பெற்றோர்களும், ஆசிரியர்களும்தான் குழந்தைகளின் ஆகச்சிறந்த முன்மாதிரிகள். குழந்தைகள் எப்படி கற்றுக் கொள்கிறார்கள் என உலகச் சிறந்த ஆய்வு நூல் ஒன்றில் 40 சதவிகிதம் மட்டுமே பள்ளியில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள். மீதமுள்ள 60 சதவிகித கற்றல் பொதுவெளியில், சமூகத்தில் இருந்துதான் கிடைக்கிறது. 
குழந்தைகளுக்கு கதைகளை நிறைய சொல்லித் தர வேண்டும். தொலைக்காட்சியில் பிம்பங்களாக அவர்கள் பார்க்கும் கதையை விடவும், நாம் சொல்லித் தரும் கதைகளில் இருந்து குழந்தைகளுக்குக் கற்பனைத் திறன் வளரும். 
எந்தக் குழந்தையும் முட்டாள் குழந்தை அல்ல. எல்லோரிடமும் 
ஏதாவதொரு திறன் ஒளிந்திருக்கும். அவர்களைப் புரிந்து கொள்ளும் திறன்தான் பெரியவர்களிடம் இல்லை. அதேபோல,
வகுப்பறையில் மாணவர்களைப் பேச அனுமதியுங்கள். எந்த வகுப்பறையில் சப்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த வகுப்பறைதான் நல்ல வகுப்பறை. அங்கிருந்து வருபவர்கள்தான் திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்றார் அவர்.  
விழாவுக்கு, பள்ளி தாளாளர் ஏ. தர்மராஜ் பிரபு தலைமை வகித்தார். துணைத் தாளாளர் த. ராமாமிர்தம் முன்னிலை வகித்தார்.  முதல்வர் வி. ராமச்சந்திரன் வரவேற்றார். பள்ளியின் பொருளாளர் த. சரவணகுமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com