கேலிவதை தடுப்பு கருத்தரங்கு
By DIN | Published On : 03rd July 2019 09:00 AM | Last Updated : 03rd July 2019 09:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் "கேலிவதை எதிர்ப்பு விழிப்புணர்வு' கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் நமுணசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மு.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். மாணவர்கள் கேலிவதை செய்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும், கேலிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் தண்டனைக்குள்ளாகும் பட்சத்தில் எந்தக் கல்வி நிலையங்களிலும் கல்வி பெற இயலாது என்றும் அவர் கூறினார்.