அறந்தாங்கி: 350 கிலோ நெகிழிப்பொருள்கள் பறிமுதல்: ரூ.35 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 14th June 2019 09:27 AM | Last Updated : 14th June 2019 09:27 AM | அ+அ அ- |

அறந்தாங்கி நகராட்சி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில் 350 கிலோ எடையுள்ள நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை விற்பனை செய்தவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
அறந்தாங்கி நகராட்சி ஆணையர் ஆர். வினோத் தலைமையில், நகராட்சி சுகாதார அலுவலர் த.முத்துகணேஷ், துப்புரவு ஆய்வாளர் சி.சேகர், உள்ளிட்ட அலுவலர்கள் அறந்தாங்கி நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜவுளி நிறுவனங்கள் மற்றும் பலசரக்கு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த எடை 350 கிலோ ஆகும். இதைத்தொடர்ந்து, வியாபாரிகளிடமிருந்து ரூ. 35 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு நகராட்சி கரூவூலத்தில் செலுத்தப்பட்டது.