மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி
By DIN | Published On : 14th June 2019 09:27 AM | Last Updated : 14th June 2019 09:27 AM | அ+அ அ- |

அன்னவாசல் அருகேயுள்ள வீரப்பட்டியில் ஊராட்சி செயலாளர்களுக்கு மண் புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வீரப்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ். சிங்காரவேலு, மற்றும் சங்கர் ஆகியோர் தலைமையில் மண் புழு உரம் தயாரிக்கும் முறை குறித்த பயிற்சி ஊராட்சி செயலாளர்களுக்கு விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.
இம்முகாமில் மண் புழு தயாரிக்கும் இடம் தேர்வு, மண் புழுவை தேர்வு செய்தல், தொட்டிமுறை மற்றும் குவியல் முறையில் மண் புழு உரம் தயாரித்தல், பயிர் கழிவுகள், நகரக் கழிவுகள், கோழிக் கழிவுகளில் இருந்து மண் புழு உரம் தயாரித்தல், ஒவ்வொரு வேளாண் பயிர்களுக்கு மண் புழு உரமிடும் அளவு குறித்த பரிந்துரை, மண் புழு உரத்தின் நன்மைகள், மண் புழு ஊட்ட நீர் தயார் செய்யும் முறை, அதனை பயிர்களுக்கு தெளிக்கும் அளவு உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இம்முகாமில் அன்னவாசல் ஒன்றிய மேற்பார்வையாளர்கள், பொறியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.