கோவிலூரில் ஜல்லிக்கட்டு: 22 பேர் காயம்
By DIN | Published On : 06th March 2019 09:15 AM | Last Updated : 06th March 2019 09:15 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 22 பேர் காயமடைந்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் சிவகுமார் தொடங்கி வைத்தார்.
இதில் புதுகை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 700 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை 217 மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். அப்போது, காளைகள் முட்டியதில், 22 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதில், பலத்த காயமடைந்த 5 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
தொடர்ந்து, காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஆலங்குடி போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.