எல்கேஜி மாணவர்கள் களப்பயணம்!
By DIN | Published On : 22nd March 2019 08:42 AM | Last Updated : 22nd March 2019 08:42 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் எல்கேஜி மாணவ, மாணவிகள் களப்பயணமாக வியாழக்கிழமை அருள்மிகு பிரகதம்பாள் திருக்கோயிலுக்குச் சென்றனர்.
கோயிலின் சிற்பங்களைப் பார்த்து அவற்றின் வரலாற்றை மாணவர்கள் கேட்டறிந்தனர். கோயில் அர்ச்சகர் ஆன்மிக முக்கியத்துவம் குறித்த செய்திகளை விளக்கினார்.
ஆசிரியைகள் சித்ராதேவி, சுதா, சித்ரா, பவுலின், கீர்த்தனா, கோமதி ஆகியோர் மாணவ, மாணவிகளை வழிநடத்திச் சென்றனர்.
வழக்கமான சுற்றுலாவாக எங்காவது ஒரு சுற்றுலாத்தலத்துக்குச் சென்று திரும்புவதைக் காட்டிலும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதம்பாள் கோயிலுக்குச் சென்று அந்த வரலாற்றை அறிந்து கொள்ளச் செய்வது வளர்ந்து வரும் மாணவர்களுக்கு அரிய ஒன்றாக மாறும் என்கிறார்கள் ஆசிரியைகள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...