வாக்காளர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள்
By DIN | Published On : 22nd March 2019 08:42 AM | Last Updated : 22nd March 2019 08:42 AM | அ+அ அ- |

ஆலங்குடியில் வியாழக்கிழமை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வருவாய்த் துறையினர் வழங்கினர்.
ஆலங்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பேருந்து நிலையம், அரச மரம் பேருந்து நிறுத்தம், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், பொதுமக்களிடம் வழங்கினர். துணை வட்டாட்சியர் ஜவஹருல்லா, வருவாய் ஆய்வாளர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...