புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் அருகேயுள்ள சித்தம்வயலில் உள்ள புனித அந்தோனியார் ஆலய தேர்பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தினமும் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனியை முன்னிட்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோனியாரை எழுந்தருளச் செய்தனர். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடைபெற்றது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.