அரசுப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வருகை
By DIN | Published On : 05th May 2019 03:24 AM | Last Updated : 05th May 2019 03:24 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான 2019-20ஆம் கல்வியாண்டுக்கான முதல் பருவப் பாடப் புத்தகங்கள் சனிக்கிழமை வந்தன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வந்த இந்தப் பாடப் புத்தகங்கள், அருகேயுள்ள தேர்வுக்கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டன. விடுமுறைக்குப் பிறகு அவற்றை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்து முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.