கீரமங்கலம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நடப்படும் மின்கம்பங்கள்
By DIN | Published On : 05th May 2019 03:25 AM | Last Updated : 05th May 2019 03:25 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் சாலை முக்கங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நடப்படும் மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீரமங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையோரம், முக்கங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள் நடும் பணி நடைபெறுகிறது.
இதில் கீரமங்கலம் அக்னி பஜார் கடைவீதியில் இருந்து கொடிக்கரம்பை செல்லும் சாலையை மக்கள், பள்ளி, வங்கி, நெல், கடலை ஆலைகள் செல்வதற்காக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
சாலை வளைவுகள் அதிகமுள்ள நெருக்கடி மிகுந்த இச்சாலையில், போக்குவரத்து இடையூறாக சாலையோரங்களிலும், சாலை முக்கங்களிலும் மின் கம்பங்கள் நடப்படுகின்றன. இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மின் கம்பங்களை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.