விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழாவின் 5 ஆம் நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை அம்மனுக்கு பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது.
இக்கோயில் திருவிழா கடந்த மார்ச் 30 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுகிறது. சனிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து உபயதாரர்களின் சார்பில் மண்டகப்படி நடத்தப்பட்டு பக்தர்களுக்கு நீர் மோர், பானக்கம், இனிப்பு கூழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து மெய்க்கண்ணுடையாள் அம்மன் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக உலா வந்து காட்சியளித்தார். ஏற்பாடுகளை உபயதாரர் எஸ். கண்ணப்பன், ஏ. கண்ணன். ஏ. முத்துக்கண்ணம்மாள், ஏ. மெய்யப்பன் உள்ளிட்டோர் செய்தனர்.