இரு இடங்களில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 10 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கல்லூரில்... புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கல்லூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை நடந்த மஞ்சுவிரட்டுக்கு உரிய அனுமதி பெறவில்லையாம்.
இதுகுறித்து கே. புதுப்பட்டி போலீஸார் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த விழா கமிட்டியை சேர்ந்த கணேசன் (49), சந்திரசேகரன் (49), காசி (63), வேலப்பன்(32), வெள்ளைச்சாமி (54) உள்ளிட்டோர் மீது அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
பெருங்குடியில்.. இதேபோல அரிமளம் ஒன்றியம், பெருங்குடி கிராமத்தில் வேண்டிவந்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தியதாக விழா கமிட்டியை
சேர்ந்த ராஜேந்திரன் (47), செந்தில்நாதன் (37), மணி (35), விஸ்வநாதன் (28), சுப்பையா (30) உள்ளிட்டோர் மீது அரிமளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.