சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து சாவு
By DIN | Published On : 15th May 2019 08:39 AM | Last Updated : 15th May 2019 08:39 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை அருகே சாலையில் நடந்து சென்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டம் ஓணாங்குடியைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (35). புதுக்கோட்டை நகரிலுள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்த இவர், திங்கள்கிழமை பகலில் கடையக்குடி பகுதியில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது.
அவ்வழியே சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவித்தனர். வந்துப் பார்த்த ஆம்புலன்ஸ் சேவைப் பணியாளர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். சத்தியசீலன் மது அருந்தியிருந்ததாகவும் தெரிகிறது. அரிமளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.