அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு
By DIN | Published On : 19th May 2019 08:53 AM | Last Updated : 19th May 2019 08:53 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலின் வைகாசிப் பெருவிழாவையொட்டி அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்விப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
அரங்குளநாதர் நற்பணி இயக்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தெற்கு மாவட்ட விவசாய அணித் துணை அமைப்பாளர் பி. வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ. லியோனி, திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் அஞ்சுகா மீனாட்சி சுந்தரம் , ஒன்றியச் செயலர் க. ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் செ. முனியாண்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தொடர்ந்து குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பெரிதும் தீர்மானிப்பது கனிந்த மனமா? நிறைந்த பணமா? என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.