ஆலங்குடி அருகே லாரி சக்கரங்கள் திருட்டு
By DIN | Published On : 19th May 2019 08:52 AM | Last Updated : 19th May 2019 08:52 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் 4 சக்கரங்களை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச்சென்றது குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலங்குடி அருகேயுள்ள மாங்காட்டைச் சேர்ந்தவர் ஆ.மாரிமுத்து. இவருக்குச் சொந்தமான லாரி புளிச்சங்காடு கைகாட்டியில் வெள்ளிக்கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தரையில் இருந்து லாரியை உயர்த்தி பழுது நீக்கப் பயன்படுத்தும் ஜாக்கியைப் பயன்படுத்தி லாரியின் 4 பின் சக்கரங்களையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து, புகாரின்பேரில் வடகாடு போலீஸார் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.