இலுப்பூர் பெருமாள் கோயிலில் தேரோட்டம்
By DIN | Published On : 19th May 2019 08:54 AM | Last Updated : 19th May 2019 08:54 AM | அ+அ அ- |

இலுப்பூர் அலர்மேல்மங்கை சமேத கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற வைகாசி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அலர்மேல்மங்கை சமேத கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் உத்ஸவ மூர்த்திகள் சிறப்பு அலங்கார பல்லக்கில் ராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக வெங்கடேசப்
பெருமாள், அலர்மேல்மங்கை சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
விழாவை முன்னிட்டு உபயதாரர்கள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்தனர்.