மயிலைக் கொன்றவர் கைது
By DIN | Published On : 19th May 2019 08:51 AM | Last Updated : 19th May 2019 08:51 AM | அ+அ அ- |

நாட்டின் தேசியப் பறவை மயிலை பிடித்துக் கொன்றவரை வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் ஆனந்த் உத்தரவின் பேரில் கீரனூர் வனச்சரக அலுவலர் சங்கர் தலைமையில் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது செம்பாட்டூர் கண்மாய் அருகே ஒருவர் இறந்த மயிலை எடுத்து வந்துள்ளார்.
இதனையடுத்து வனத்துறையினர் அவரைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரத்தைச் சேர்ந்த மணி மகன் கமல்ஹாசன் (35) என்பதும் இவர் வலை கட்டி மயிலைப் பிடித்து பின்னர் கொன்றது தெரியவந்தது.
இதனையடுத்து மயிலின் உடலைப் பறிமுதல் செய்த வன அலுவலர்கள் கமல்ஹாசனைக் கைது செய்து கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.