மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது
By DIN | Published On : 26th May 2019 02:51 AM | Last Updated : 26th May 2019 02:51 AM | அ+அ அ- |

விராலிமலை அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவளித்த நபரை, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் திருநாவுக்கரசு (42). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாணவியின் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவிக்கு அவர் பாலியல் தொந்தரவளித்துள்ளார். இதைக் கண்ட அவரது தாய் திருநாவுக்கரசை கண்டித்தததோடு, இது குறித்து விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து திருநாவுக்கரசிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.