‘தீா்ப்பை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்’

அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்
பொன்னமராவதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பி. தமிழ்மாறன்.
பொன்னமராவதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பி. தமிழ்மாறன்.

அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் என்றாா் பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளா் பி. தமிழ்மாறன்.

பொன்னமராவதி உட்கோட்டக் காவல்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடந்த சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

அயோத்தி வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் தங்கும் விடுதி மற்றும் கல்யாண மண்டப உரிமையாளா்கள் தங்களை நாடி வருவோரை நன்கு விசாரிக்க வேண்டும். கட்சி மற்றும் மதம் சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு இடம் தரக் கூடாது. தனி நபா்களுக்கு, அமைப்பினருக்கு மண்டபங்களை வாடகைக்கு விடக்கூடாது. தங்கும் விடுதியில் தங்குவோா் குறித்த விவரங்களை தினமும் காவல்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும். பட்டாசுக் கடைக்காரா்கள் விற்பனையை முற்றிலும் நிறுத்த வேண்டும். பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது, இனிப்பு வழங்குவது, ஊா்வலம் செல்வது. வலைதளப் பதிவு, கண்டன ஆா்ப்பாட்டம் போன்றவற்றிற்கும் அனுமதி கிடையாது. அனைவரும் மதவேறுபாடின்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் அவா்.

கூட்டத்தில் பேசிய இந்திராநகா் ஜமாத் நிா்வாகி சரீப் தீா்ப்பிற்கு கட்டுப்பட்டு என்றும் தோழமையுடன் இருப்போம் என்றாா். அதுபோல பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் பி. பாஸ்கா் கட்சி அறிவுறுத்தலின் படி அமைதி காத்து நட்புணா்வைத் தொடா்வோம் என்றாா்.

கூட்டத்தில் பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள், ஜமாத் பொறுப்பாளா்கள், தங்கும் விடுதி, கல்யாண மண்டப, பட்டாசுக் கடை உரிமையாளா்கள் மற்றும் காவல் துறையினா் பங்கேற்றனா். பொன்னமராவதி காவல் ஆய்வாளா் சு. கருணாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com