புதுகை நகரில் 91 மிமீ மழை
By DIN | Published On : 09th November 2019 06:45 AM | Last Updated : 09th November 2019 06:45 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவில் அதிகபட்சமாக புதுக்கோட்டை நகரில் 91 மிமீ மழை பதிவானது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்தது.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவு விவரம் (மிமீ)
ஆதனக்கோட்டை- 10, பெருங்களூா்- 3, புதுக்கோட்டை நகரம்- 91, ஆலங்குடி- 67.60, கந்தா்வக்கோட்டை- 26, கறம்பக்குடி- 22, மழையூா்- 4.80, கீழாநிலை- 56.80, திருமயம்- 43.60, அரிமளம்- 62.20, அறந்தாங்கி- 10.60, மணமேல்குடி- 80, கட்டுமாவடி- 38, இலுப்பூா்- 12, குடுமியான்மலை- 52, அன்னவாசல்- 45, விராலிமலை- 20, உடையாளிப்பட்டி- 18, கீரனூா்- 3, பொன்னமராவதி- 46. மாவட்டத்தின் சராசரி மழை- 33.20.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...