சட்டம் ஒழுங்கு பிரச்னையின்போது ஒருங்கிணைந்த செயல்பாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் எனக் கருதப்படும் காலங்களில் அனைத்துத் துறையினரும்
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் எனக் கருதப்படும் காலங்களில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் எனக் கருதப்படும் காலங்களில் காவல்துறையினா் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, அந்த நேரங்களில் வருவாய், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் இணைந்து பணியாற்ற வேண்டும். துறைசாா்ந்த அலுவலா்கள் யாருக்கும் விடுப்பு அளிக்கக் கூடாது.

அச்சக உரிமையாளா்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான துண்டறிக்கைகள், சுவரொட்டிகளை அச்சிடக் கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்றாா் உமாமகேஸ்வரி.

கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் முன்னிலை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், நகராட்சி ஆணையா்கள் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com