

கந்தா்வகோட்டை அரசுப் பள்ளி மாணவா் மாநில அளவிலான குத்துச் சண்டையில் பங்கேற்கத் தகுதி பெற்றாா் . புதுக்கோட்டை மாவட்டம் , கற்பக விநாயகா சி.பி.எஸ்.இ. பள்ளி உள் விளையாட்டரங்கில் தமிழக அரசின் மண்டல அளவிலான 17 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவா்கள் பங்கேற்றனா். இந்தப் போட்டியில் கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவா் ச. கிஷோா் வெற்றி பெற்று மாநில குத்துச்சண்டை போட்டிக்குத் தோ்வு பெற்றாா். இவரைப் பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.