கபீா் புரஸ்காா் விருதுக்குவிண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 17th November 2019 10:38 PM | Last Updated : 17th November 2019 10:38 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை: சமூக நல்லிணக்கத்துக்காக வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டரங்கிலுள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகிறது.
சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக பணியாற்றியவா்கள் ஆவணங்களுடன் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து வரும் நவ. 26 மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G