குறுவட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 01st September 2019 02:34 AM | Last Updated : 01st September 2019 02:34 AM | அ+அ அ- |

புதுக்கோட்டையில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் 19 வயதுக்குட்ட மாணவிகளுக்கான பிரிவில் கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் பள்ளி மாணவிகள் அணியினர் முதலிடம் பிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் வித்யா விகாஸ் பள்ளி மாணவிகள் அணியினர் முதலிடம் பிடித்தனர். முன்னதாக நடைபெற்ற கையுந்து பந்து போட்டி, கூடைப் பந்து போட்டி, டென்னிஸ், சதுரங்கம், கோ-கோ, கபாடி மற்றும் ஹாக்கி ஆகிய போட்டிகளில் இப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனர்.
இதையடுத்து, போட்டியில் வென்ற மாணவ மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளியின் செயல் அறங்காவலர் பாஸ்கர், மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் மாணவ, மாணவிகளைப் பாராட்டினர். விழாவின்போது, மெட்ரிக். பள்ளி முதல்வர் வெண்ணிலா, நிர்வாக அலுவலர் சதாசிவன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.