தூங்கிய பெண்ணிடம் இருந்து 9 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
By DIN | Published On : 01st September 2019 02:32 AM | Last Updated : 01st September 2019 02:32 AM | அ+அ அ- |

ஆவுடையார்கோவில் அருகே உள்ள பலவரசன் கிராமத்தில் சனிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 9 பவுன் தங்க நகையை மர்மநபர் திருடிச்சென்றுள்ளார்.
பலவரசன் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவி சேதுமதி(50). இவர் சனிக்கிழமை மதியம் மின்சாரம் இல்லாததால் வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து வைத்தபடி தூங்கிக் கொண் ருந்துள்ளார். அப்போது, அவ்வழியே வந்த மர்மநபர், சேதுமதி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆவுடையார்கோவில் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.