புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயில் ஆவணித்திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது.
திருவிழா துவங்கி 7 நாட்களும் அம்மன் வீதி உலா காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வழிநெடுகிலும் அர்ச்சனைகள் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வரும் ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்கள் காவடி பால் குடம் எடுத்து பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். செவ்வாய்க்கிழமை மாலை அக்னி காவடி எடுத்து வந்து அம்மன் கோயில் முன்பு அமைந்துள்ள அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். பின்னர் கிராமத்தார்கள் இரவு பொங்கல் அம்மனுக்கு படைத்து வழிபடுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.