காவிரி-குண்டாறு இணைப்பை வலியுறுத்தி தெருமுனைப் பிரசாரம்
By DIN | Published On : 11th September 2019 08:50 AM | Last Updated : 11th September 2019 08:50 AM | அ+அ அ- |

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தொடக்க நிதி ஒதுக்கீடு செய்து, கால்வாய் வெட்ட வலியுறுத்தி தெருமுனைப் பிரசாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் மு.மாதவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் முதல் கட்டமாக, மாயனூர் காவிரி ஆற்றின் கதவணையில் இருந்து புதுக்கோட்டை வரை கால்வாய் அமைக்க தேவையான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும். இப்பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் 22-ஆம் தேதி தேதி முதல் 25ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபடுவது,
தொடர்ந்து 27-ஆம் தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.