செப்.14-இல் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு நாள் கூட்டம்
By DIN | Published On : 11th September 2019 08:54 AM | Last Updated : 11th September 2019 08:54 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், செப்.14- ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தீர்வு காணவும் மாதந்தோறும் 2- ஆவது சனிக்கிழமைகளில் குறைகேட்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நிகழ் மாதத்துக்கான கூட்டம் செப்டம்பர் 14-ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறஉள்ளது.வட்டத்தின் பெயர், முகாம் நடைபெறும் கிராமம் என்ற அடிப்படையில் விவரம்:
புதுக்கோட்டை- தென்னத்திரையன்பட்டி, ஆலங்குடி- சூரன்விடுதி, திருமயம்- ஆத்தூர், குளத்தூர்- சத்தியமங்கலம், இலுப்பூர்- விசலூர், கந்தர்வகோட்டை- புதுநகர், அறந்தாங்கி- சிதம்பரவிடுதி, ஆவுடையார்கோவில்- வேதினிவயல், மணமேல்குடி- பில்லங்குடி, பொன்னமராவதி- கீழக்குறிச்சிப்பட்டி, கறம்பக்குடி- திருப்பாக்கோவில், விராலிமலை- வெம்மணி.சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.