"தமிழ் இலக்கிய நூல்கள் படிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்'
By DIN | Published On : 11th September 2019 08:52 AM | Last Updated : 11th September 2019 08:52 AM | அ+அ அ- |

தமிழ் இலக்கிய நூல்கள், நாளிதழ்கள் படிப்பதை மாணவ, மாணவிகள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்றார் பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறைத் தலைவர் நெ.ராமச்சந்திரன்.
கொப்பனாப்பட்டி -கொன்னையூர் அம்பாள் மெட்ரிகுலேசன் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் இலக்கிய மன்ற விழாவில் பங்கேற்று, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி மேலும் அவர் பேசியது:
தமிழ் மொழியின் சிறப்புகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டும். மற்ற மொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழ்மொழிக்கு உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும் இன்றும் தமிழ் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.
எனவே மாணவ, மாணவிகல் தமிழ் இலக்கிய நூல்கள்,
நாளிதழ்கள் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அவர். இந்த விழாவுக்கு பள்ளி முதல்வர் சாந்தி தலைமை வகித்தார். முத்தமிழ்ப்பாசறைச் செயலர் பெ.சதாசிவம், பொருளாளர் சிஎஸ்.முருகேசன், நிர்வாகிகள் அ.தட்சிணாமூர்த்தி, வெங்கடேசகுப்தா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக ஆசிரியை சாந்தி வரவேற்றார். நிறைவில், ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.