அன்னவாசலிலுள்ள மருந்தகத்தில் திருட்டில் ஈடுபட்டவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
அன்னவாசல் தனியார் மருத்துவமனையிலுள்ள மருந்தகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.14 ஆயிரம் திருட்டு போனது. இதையடுத்து மருந்தகத்தின் உரிமையாளர், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்த போது, மருந்துவாங்க வந்தவர் பணத்தைத் திருடுவது தெரிய வந்தது. எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.இந்நிலையில் அதே நபர் திங்கள்கிழமை இரவு மருந்தகத்துக்கு மாத்திரை வாங்குவது போல வந்துள்ளார். இதை கண்ட மருந்தக உரிமையாளர் பாலசுப்பிரமணியம், அன்னவாசல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகிலுள்ள குரும்பளூர் உலகம்பட்டி சி. சக்திவேல் (28) எனத் தெரிய வந்தது. மேலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு மருந்தகத்தில் பணம் திருடியதையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து சக்திவேலை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.