அறந்தாங்கியில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி
By DIN | Published On : 11th September 2019 08:51 AM | Last Updated : 11th September 2019 08:51 AM | அ+அ அ- |

அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்களுக்கான உளவியல் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலக எழுத்தறிவு மற்றும் ஆசிரியர் தினத்தையொட்டி, ரோட்டரி மாவட்டம் 3000-இன் ஆளுநர் திட்டம் அவதாரம்-2 என்ற தலைப்பில், அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பில் இப்பயிற்சி நடத்தப்பட்டது.
ரோட்டரி கிளப் தலைவர் க. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் துணை ஆளுநர் ஆ.கராத்தே கண்ணையன் முன்னிலை வகித்தார்.
அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச்செல்வம், மாவட்ட ஆளுநரின் சிறப்புத் திட்டத் தலைவர் பெலிக்ஸ் ராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று பேசினர். பேராசிரியர் ஏ.பி. குருமூர்த்தி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தார்.
அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தி. தாமரைச்செல்வன் (ஆண்கள்), சி. கார்த்திகா ( பெண்கள்), செலக்சன் மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் எக்ஸலண்ட் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
பயிற்சித் தொடக்க விழா நிகழ்வில், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர்கள் அ.ஆறுமுகம், அ. சாத்தையா, அ.அபுதாலிப், வருங்காலத் தலைவர் கே.எஸ். ராமன் பரத்வாஜ், வெ.வீரமாகாளியப்பன் நல்லாசிரியர் விருது பெற்ற க.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ரோட்டரி கிளப் வருங்காலத் தலைவர் (தேர்வு)எஸ்,.வீரமணிகண்டன் வரவேற்றார். நிறைவில் ரோட்டரி நிர்வாகி வி.ஜி.செந்தில்குமார் நன்றி கூறினார்.