புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 99 மதுபாட்டில்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
இலுப்பூர் ஜீவாநகர் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக புதுக்கோட்டை கலால் துறை அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதன் பேரில், கோட்ட கலால் அலுவலர் எஸ்.பி. மனோகரன், கலால் உதவி ஆணையர் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை ஜீவாநகர் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஜீவாநகர் ஆர்.சி. பள்ளி அருகே
விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஜீவாநகர் குமார் (53), வெள்ளியங்குடிப்பட்டி பொன்னுசாமி (42) ஆகிய இருவரையும் கைது, அவர்களிடமிருந்து 99 மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.