உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி அருகே பூவைமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் பசுமை படை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வே. அய்யாக்கண்ணு தலைமை வகித்து மரக்கன்று நட்டு உரையாற்றினார்.ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி, தெய்வேந்திரன், சிதம்பரம், மணி, சுதா,சுப்பிரமணியன், கண்ணன், தனபால், சாந்தி உள்ளிட்ட ஆசிரியர்களுடன் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் 60 மரக்கன்றுகளை நட்டனர். பசுமைபடை ஆசிரியர் பழனியப்பன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.