புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு
By DIN | Published On : 22nd September 2019 03:40 AM | Last Updated : 22nd September 2019 03:40 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை கீழ 2ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை கீழ 2ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஸ்ரீ பெருந்தேவி நாயகா உடனுறை ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
தொடர்ந்து மாலையில் கருட வாகனத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.