ரோட்ராக்ட் நிர்வாகிகள் பணியேற்பு
By DIN | Published On : 22nd September 2019 03:39 AM | Last Updated : 22nd September 2019 03:39 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ரோட்ராக்ட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். ரோட்ராக்ட் சங்க முன்னாள் தலைவர் அமிர்தகேசவன் வரவேற்றார். முன்னாள் தலைவர் பொறியாளர் பஷீர்முகமது முன்னிலை வகித்தார். ரோட்ராக்ட் குழுவின் இணைத் தலைவர் பொறியாளர் ஸ்ரீராம், ரோட்டரி துணை ஆளுநர் ஜெய்சன் ஜெயபாரதன், கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்திப் பேசினர்.
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்க செயலர் பொறியாளர் பெர்லின் தாமஸ், முன்னாள் தலைவர் ஜெய் பார்த்தீபன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
ரோட்ராக்ட் சங்க புதிய தலைவராக கெனிஸ் கிளானன் தாஸ், செயலராக சபாபதி, பொருளாளராக சூர்ய குமார் உள்ளிட்டோரும் பணியேற்றுக் கொண்டனர்.