கல்லாலங்குடி கோயில் உண்டியல் திருட்டு
By DIN | Published On : 29th September 2019 03:45 AM | Last Updated : 29th September 2019 03:45 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உண்டியலை மர்மநபர்கள் சனிக்கிழமை திருடிச்சென்றனர்.
கல்லாலங்குடியில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு சனிக்கிழமை நண்பகல் இருவர் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயில் பூசாரி லெட்சுமணன் ஆராதனைகள் செய்துள்ளார். தொடர்ந்து, இருவரும் கோயில் அருகே அமர்ந்திருந்தனராம். பூசாரி லெட்சுமணன் வீட்டுக்குச் சென்றுவிட்டு, பின்னர் கோயில் வந்து பார்த்தபோது, கோயில் உண்டியலைக் காணவில்லையாம்.
இதுகுறித்து லெட்சுமணன் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸார் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.