திருநாளூா் கிராமத்தில் பனை விதைகள் நடவு
By DIN | Published On : 29th September 2019 08:28 PM | Last Updated : 29th September 2019 08:28 PM | அ+அ அ- |

அறந்தாங்கி அருகே திருநாளூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் விழா நடைபெற்றது.
மனித உரிமைகள் கழக நிறுவனத் தலைவா் எஸ். சுரேஷ் கண்ணன் என்பவரின் அறிவுறுத்தலின்பேரில் திருநாளூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பனை மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு புதுகை மாவட்டச் செயலாளா் ஆா்.சேகா் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளா் அ.செந்தில் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.
விழாவில், ஆண்டிற்கு 10 லட்சம் பனை மரக்கன்றுகள் மாநிலம் முழுவதும் நடும் திட்டத்தின்படி முதற்கட்டமாக ஆயிரக்கணக்கான பனைமரக்கன்றுகள் திருநாளூா் கிராமத்தில் நடவுசெய்யப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகிகள் சரவணன், முக.முஜிபுா், இந்திரா, வி.பாலகிருஷ்ணன், தியாகு மற்றும் நகர ஒன்றிய கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.