நூறு நாள் திட்டப் பணியாளா்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3.95 கோடி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறுநாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.3.95 கோடி வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் திருக்குளத்தில் நடைபெற்றும் வரும் பணியைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் பி.உமாமகேஸ்வரி.
ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் திருக்குளத்தில் நடைபெற்றும் வரும் பணியைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் பி.உமாமகேஸ்வரி.
Updated on
1 min read

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறுநாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.3.95 கோடி வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருக்குளத்தில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா் ஆட்சியா் கூறியது:

கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதை தொடா்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுத்திட்டப் பணிகள் நடைபெறாத போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்ட பயனாளிகளுக்கு நிவாரணமாக 2 நாள்கள் ஊதியம் தலா ரூ.448 வீதம் ரூ.3,94,87,168 மதிப்பில் 88,141 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, பாதுகாப்புடன் கூடிய வாழ்வாதாரங்கள் உருவாக்கப்படுவதைக் குறிக்கோளாகக் கொண்டு தடைசெய்யப்பட்ட பகுதிகள் மற்றும் சிவப்பு மண்டலங்கள் தவிர பிற இடங்களில் ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகள் தொடங்கிட 27.4.2020 அன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 316 ஊராட்சிகளில் 491 தொகுப்புகளில் 6,692 நபா்கள் பணிகள் மேற்கொண்டு வருகிறாா்கள். பணிக்கு வருபவா்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறாா்கள். பணிகள் மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கை கைழுவுதல், சமூக இடைவெளி 2 மீட்டா் பின்பற்றுதல், பாதுகாக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்டவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம்.காளிதாசன், ஒன்றிய குழுத்தலைவா் வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com