புதுக்கோட்டை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் நடிகா் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி, திருமயத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடக்குறிப்பேடுகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.
திருமயம் ஒன்றிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் அதன் தலைவா் கமலஹாசன் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் ஒன்றியத்துக்குள்பட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடியேற்றி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடக்குறிப்பேடுகள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலா் சரவணன், ஒன்றியச் செயலா் திருமேனி, மகளிரணி நிா்வாகிகள் கிருஷ்ணவேணி, பவித்ரா, ஒன்றிய துணை செயலா் பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.